நம் குலதெய்வத்தின் மகிமை
நம் வேடகுல மக்கள் வீடுகளில் கண்டம்மாளின் கொலுசு சத்தமும், ஆயிரங்காவு அய்யனாரின் வாக சத்தமும் (குதிரை வாகனம்) இன்றளவும் கேட்டு கொண்டு மகிழ்ந்து வருகிறோம்.
தினம் ஒரு திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
வேட நாடார் சிறப்பு
நம் முன்னோர் செல்வ செழிப்புடன் வாழ்ததற்கு ஆதரமாக சாத்தூர் தாலுகா உப்பத்தூர் என்னும் ஊரில், 64 - நிறைவாசல், 100 - ஜன்னல் கொண்ட பொழிவு பெற்ற வேடநாடார் இல்லத்தை இன்றளவு காணலாம்.
குத்துவிளக்கு பூஜை
அன்னதானம்
பெறந்த மகள் பழபெட்டி
முடி காணிக்கை
காது குத்து
நன்கொடை
கட்டிட நிதி
காணிக்கை உண்டியல்

ஸ்ரீ கண்டம்மாள்
உ
ஸ்ரீ ஆயிரங்காவு அய்யனார் துணை
ஸ்ரீ கண்டம்மாள் துணை
முன்னொரு காலத்தில் நம் வேடநாடார் குலமக்கள் தூத்துக்குடி மாவட்டம், குறும்பூர் என்னும்
ஊரிலிருந்து தென்மேற்கே சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புறையூர் என்னும் சிற்றூரில்
ஸ்ரீ ஆயிரங்காவு அய்யனார், புலமாடசாமி, பேச்சியம்மாள், அருள்மிகு சன்னாசி ஆகிய தெய்வங்களை நம்
முன்னோர்கள் குலதெய்வமாக வழிபாடு செய்து வாழ்ந்து வந்தார்கள்.
அப்படி வழிபட்டு வரும் காலத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலூகா சாமிநத்தம் என்னும்
அழகிய சிற்றூரில் நம் வேடநாடார் குலமக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பங்குனி மாத உத்திர
திருநாளில் புறையூரில் உள்ள நம் குலதெய்வத்தை வழிபாடு செய்து வாழ்ந்து வரும் காலத்தில்,
சாமிநத்தத்தில் வாழும் கருப்பசாமி நாடார் - பாலம்மாள் தம்பதியினர்க்கு பெண் மகவு பிறக்கிறது. தன்
மகளுக்கு பேச்சியம்மாள் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.
பேச்சியம்மாள், சிறுபிள்ளையாக இருக்கும்போது சாமிநத்தம் வேடநாடார் குலமக்களுடன், பங்குனி
உத்திர திருவிழாவிற்கு மாட்டு வண்டி பூட்டி புறையூர் ஸ்ரீ ஆயிரங்காவு அய்யனாரை வழிபாடு செய்து
விட்டு தங்கியிருக்கும் இடத்தில், பேச்சியம்மாளை காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அப்போது ஸ்ரீ ஆயிரங்காவு அய்யனார் கோவில் மேற்கு திசையில் உள்ள ஸ்தல விருட்சக ஆலமரத்தில்,
அவள் சிரிப்பொலி கேட்டது. அங்கு சென்று பார்க்கையில் அசரிரீ ஒலியாக “பேச்சியம்மாள் எனக்கு
கருவளைவி, காதோலை, கருகமணி, சிறுசொலவு, சிறுகொட்டாம்பட்டி, மரக்காபொம்மை, சித்தாடை
வாங்கி தாருங்கள் வருகிறேன்” என கேட்டாள். அவள் பெற்றோரும் வாங்கி வந்து அவளை
அழைத்தார்கள். அப்போது வாங்கி வைத்த பொருட்கள் முன் பேச்சியம்மாள் காட்சி அளித்தாள்.
அவளை தாயார், “காணாமல் போய் கண்டெடுத்த என் கண்டம்மாள் தாயே” என வாரி அணைக்க
போக அவள் மறைந்து விடுகிறாள். அப்போது அசரீரி ஒலியாக “சாமிநத்தத்தில் எனக்கு வாங்கி வைத்த
பொருள்களோடு என்னை கண்டம்மாள் என்னும் பெயரில் தெய்வமாக வழிபடுங்கள், நம் வேடநாடார்
குலமக்களை அருள்பாலிக்கிறேன்”. என கண்டம்மாள் குரல் ஒலித்தது அதை கேட்ட நம் வேடகுலமக்கள்,
சாமிநத்தத்தில் கண்டம்மாளுக்கு கோவில் கட்டி, கண்டம்மாளை ஜோதிவடிவாக வணங்கி, விளையாட்டு
பொருட்களான காதோலை, கருகமணி, சிறுசொலவு, சிறுகொட்டாம்பட்டி, மரக்காபொம்மை வைத்து,
அவளுக்கு விருப்பமான அவல் (வாய்கட்டி இடித்தது), பொரிகடலை, பானகம் கனிவர்கம், சனி கிழங்கு,
அவித்த தட்டைபயிறு வைத்து பொங்கவிட்டு மாவிளக்கேற்றி அம்மாளுக்கு சமர்ப்பித்து, பூவால்
அலங்கரித்து, கரும்பால் பந்தலிட்டு, கண்டம்மாள் உத்தரவுபடி சிறு பெண் குழந்தைகள் மட்டுமே
அம்மாளுக்கு அலங்காரம் செய்து தீப ஆராதனை காட்டியபடி இன்றளவும் பூஜை வழிபாடு செய்து
வருகிறோம்.
காலம் செல்ல செல்ல பொருளீட்ட நம் வேடநாடார் குலமக்கள் சிங்கப்பூர், மலேசியா, பர்மா, இலங்கை என பல இடங்களுக்கு சென்றார்கள்.
நாட்கள் கடக்க நம் கூட்டத்தையும், நம் குலதெய்வத்தையும் மறந்தார்கள். தெரிந்தவர்கள் கோவில் சென்று வந்தார்கள்.
1958-ல் ப.செல்லையா நாடார் அவர்கள் தன் குலதெய்வத்தைத் தேடி புறையூர் சென்றார். சென்ற
இடத்தில் அருள்வந்து உடைமரத்துக்குள் அழைத்து அய்யன் சன்னிதானத்தின் முன் “இதுதான் நம்மவர்
சன்னதி” என்று வாய்பூட்டு திறந்தன. அன்று முதல் ப.செல்லையா நாடார் அவர்கள் அருள்வாக்கு
பலித்தது.
மேலும் 1959-ம் ஆண்டு அவர் தம் குடும்பத்தையும், வேடகுல பெருமக்களையும் ஒன்று திரட்டி
கொண்டு புறையூரில் உள்ள நம் ஆயிரங்காவு அய்யனாரை வழிபட அழைத்து சென்றார். (இன்றளவும் அதுபோல் வழிபட்டு வருகிறோம்).
அப்போது கண்டம்மாள் சிரிப்பொலியும், முரசொலியும் கேட்டு சாமி கும்பிட வந்தவர்கள்
மெய்சிலிர்த்தார்கள். பிறகு கோவில் முன்பு ப.செல்லையா நாடார் அருள்வாக்கில் “நான் இங்கு
(சாமிநத்தம்) இருக்கிறேன்; வேடநாடார் குலமக்கள் எல்லோரும் என்னை கூடி வழிபடுங்கள்” என்று
சொன்னார்.
இதனை கேட்ட ப. செல்லையா நாடார் - அமிர்தம்மாள் பெரும் முயற்சியால் உப்பத்தூர்,
சின்னையாபுரம், அய்யாகோட்டூர், மீனாட்சிபுரம், பாண்டவர் மங்களம், ஏழாயிரம் பண்ணை, கோவில்பட்டி
ஆகிய ஊரில் வசிக்கும் நம் குலமக்களை ஒன்று கூட்டி அய்யாகோட்டூர் திரு. ராஜசிங்கம் நாடார்
அவர்களின் லாரியில் பங்குனி உத்திர திருநாளில் சென்று ஸ்ரீ ஆயிரங்காவு அய்யனாரை வழிபட்டார்கள்.
இன்றளவும் அதுபோல் நம் குலம் தளைக்க சென்றவர்கள், செல்வ செழிப்புடன் பங்குனி உத்திர
திருநாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
வருடந்தோறும் மாசி மஹா சிவராத்திரி தினத்தில், நம் வேடநாடார் குலமக்கள், சாமிநத்தம் ஸ்ரீ
கண்டம்மாளை வழிபாடு செய்து வந்தார்கள். 1967ம் ஆண்டு மாசி மஹா சிவராத்திரியில் ஸ்ரீ
கண்டம்மாளை வழிபடுகையில் ப. செல்லையா நாடார் அருள்வாக்கில் “எனது கோவில் புனரமைப்பு செய்துஎல்லோரும் ஒன்று சேர்ந்து வழிபடுங்கள்” என சொன்னாள்.
உப்பத்தூர் - சண்முகவேல் சாமிநாடார் (டெய்லர்)
உப்பத்தூர் - மூக்கையா நாடார்
உப்பத்தூர் - பூவலிங்க நாடார்
அய்யாகோட்டூர் - ராஜசிங்கம் நாடார்
திருச்சி - T.P.K. முனியசாமி நாடார்
திருச்சி - T.P.K. தங்கசாமி நாடார்
மீனாட்சிபுரம் - பொன்னுசாமி நாடார் (மன்னார்குடி)
சாமிநத்தம் - அய்யம்பெருமாள் நாடார்
சாமிநத்தம் - காசிநாடார்
மீனாட்சிபுரம் - கன்னியப்ப நாடார் (டிரைவர்)
சாமிநத்தம் - சின்னமணி நாடார்
பாலமேடு - M.S. சுப்பையா நாடார்
பாலமேடு - M.S. நாகசுந்தர நாடார்
மீனாட்சிரம் - ஐயம்பெருமாள் நாடார்
ஏழாயிரம் பண்ணை - வே.தொ. ஆறுமுகச்சாமி நாடார்
விருதுநகர் - மகாலிங்க நாடார் (கறி கடை)
விருதுநகர் - குமாரவேல் நாடார் (ஹைதராபாத்)
சின்னையாபுரம் - சதுரகிரி நாடார்
கோவில்பட்டி - ப. செல்லையா நாடார்
ஆகியோர் முன் நின்று கோவில் மதில் சுற்று அமைத்தனர். (காவல் தெய்வமாக அருள்மிகு புலமாடசாமியை நிறுவினர்)
1969-ம் ஆண்டு, கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லியம்மன் கோவில் தலைமை அர்ச்சகர், திருவாளர்.
பரசுராம் பட்டர் அவர்கள் தலைமையில்
ப. செல்லையா நாடார் - அமிர்தம்மாள்
T.P.K. முனியசாமி நாடார் - M. ரெங்கம்மாள்
வே.தொ. ஆறுமுகச்சாமி நாடார் - ரஞ்சிதம்மாள்
குமாரவேல் நாடார் - K. சீதாலெட்சி
அய்யம்பெருமாள் நாடார் - காந்திமதியம்மாள்
மேலும் நம் வேட நாடார் மக்கள் அனைவரும் ஒன்று கூடி நம் கண்டம்மாளுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்து மகிழ்ந்தார்கள்.
நம் வேடநாடார் குல மக்கள் படிபடியாக முன்னேரி
ஸ்ரீ கண்டம்மாளை கூடி வழிப்பட்டது.
அப்படி படிபடியான நம் வளர்ச்சியில் கண்ட ஆவணங்கள்.
1985-ம் ஆண்டு மஹாசிவராத்திரி அன்றின் தலைகட்டு வரியின் சிறப்பு
1986ம் ஆண்டு சாமிநத்தம் அய்யம் பெருமாள் நாடார் - காந்திமதியம்மாள் குமாரர்கள், அய். குருசாமி நாடார்,
அய். சின்னதுரை நாடார் குடும்பத்தினர் பெரும்மனதோடுடன் கோவில் முன் உள்ள 5 சென்ட் நிலத்தை கோவிலுக்காக வழங்கியுள்ளார்கள்.
அந்த மனையில் 9.3.1986ம் ஆண்டு திருச்சி T.P.K.
முனியசாமி அவர்கள் தலைமையில் மண்டபம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.
1987ம் ஆண்டு மண்டபம் கட்டி முடித்து, 26-2-87ல் மாசி மகா சிவராத்தி அன்று ப. செல்லையா
நாடார், T.P.K. முனியசாமி நாடார், T.P.K. தங்கசாமி நாடார் அவர்கள் முன்னிலையில் சி. ஜவகர்லால் B.A.
(கடலூர் மாவட்ட இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்) அவர்கள் குத்து விளக்கேற்றி சிறப்பித்தார்கள்.
M. முத்தையா நாடார், சி. போஸ் நாடார் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
கு. ரத்தினபாண்டியன், வே.தொ. ஆறுமுகச்சாமி நாடார் குமாரர்கள் ஆகியோர் நன்றியுரை கூறி
சிறப்பித்தார்கள்
1) பாலமேடு M.S. சுப்பையா நாடார் குடும்பத்தார் 1993 முதல் - 1995 வரை அன்னதானத்திற்கு
தேவையான அனைத்து சமையல் பாத்திரங்களை பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி தந்தனர்.
2) கண்டம்மாள் கோவிலின் மகிமையை சிறப்பிக்கும் விதமாக கோவில்பட்டி வேடன் கூட்ட இமயம் S.M.மனோகர் நாடார் அவர்கள்,
மனைவி M. பாகீரதியம்மாள் குமாரன் விசாகன் அவர்கள் தனது சொந்த மூலதனத்தில், 4-6-2001 அன்று சுற்றுமதில் முகப்பு தோரண வாயில் மற்றும் சகல வசதிகளும்
மனமுவந்து செடீநுது கொடுத்தார்கள்.
3) 2000-ம் ஆண்டு ஏழாயிரம் பண்ணை V.T.A.. மாரியப்ப நாடார் & சன்ஸ், V.T.A. நடராஜ நாடார் & சன்ஸ் குடும்பத்தார் நள்ளி விலக்கு பிரிவிலிருந்து நம் கோவில் வரை ஆண்டு தோறும் வேன் வசதி
செய்து தருகிறார்கள்.
மேலும் 2005ம் ஆண்டு முதல் இன்றளவும், மாதந்தோறும் பௌர்ணமி பூஜை செய்து வருகிறார்கள்.
2001 -ம் ஆண்டு
4) சென்னை நாகலாபுரம் புதூரில், 2001-ம் ஆண்டு மாசி மகா சிவராத்தியில் நடந்த விளக்கு பூஜையில் மா.வே. மாரியப்ப நாடார் - பொன்னுத்தாயம்மாள் விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.
5) 2008-ல் நம் வேடகுல மக்கள் ஒன்று கூடி விளக்கு பூஜை மண்டபமும், கண்டம்மாள் கோவிலும்
இணைக்கப்பட்டு கணபதி ஹோமம் செய்து வழிபட்டோம்.
6) மா.வே. மாரியப்ப நாடார் - பொன்னுத்தாயம்மாள் அவர்களும் குமாரர்களான M.V.M. சௌந்திர
பாண்டிய நாடார் மற்றும் M.V.M.ரமேஷ்குமார் நாடார் அவர்களும் இணைந்து 2012ம் ஆண்டு விளக்கு
பூஜை மண்டபத்தை மனமுவந்து கட்டி கொடுத்தனர்.
7) 2014-ஆம் ஆண்டு நம் வேடகுல மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 40-அடி அகலம், 100-அடி
நீளம் (40 X 100) கொண்ட வானுயுரக் கூடாரம் ஒன்றை வேடகுல மக்கள் அனைவரும் அமைத்தோம்.
மேலும் இமயம் S.M. மனோகர் நாடார் - M.பாகீரதியம்மாள், குமாரன் விசாகன் அவர்கள்
இக்கூடாரத்திற்கு தளம் அமைத்து தந்தனர்.
8) 2016-ல் T.P.K. முனியசாமி நாடார் மற்றும் T.P.K. தங்கச்சாமி நாடார் அவர்கள் பெரும்
பொருட்செலவில் சமையல் கூடம் அமைத்து தந்தார்கள்.
சாமிநத்தம் வேடகுல நாடாருக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வேட விநாயகர், ஸ்ரீ கண்டம்மாள்,
புலமாடசாமி கோவிலில் 2020 ஆம் ஆண்டு நம் வேடகுல மக்கள் நிதி உதவியும்,
செல்லையா நாடார், அமிர்தம்மாள் குமாரர்கள் நிதி உதவியுடன் இக்கோவிலை
“புணரமைப்பு செய்து 27.02.2020 ஆம் ஆண்டு திங்கட்கிழமை திரிதியை திதியும், சதய
நட்சத்திரமும், மீன லக்கனமும் கூடிய சுபதினத்தில் திருநெல்வேலி பிரம்ம ஸ்ரீ வேத
சிரோண்மணி நாராயண சாஸ்திரிகள் மற்றும் குழுவினர்கள் தலைமையில் மஹா கணபதி
ஹோமம், மஹா நவக்கிரக ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வமேத பூஜைகள் செய்து,
நம் வேட கூட்ட நாடார்கள் அனைவரும் ஒன்று கூடி, ஸ்ரீ வேட விநாயகர், ஸ்ரீ கண்டம்மாள்,
புலமாடசாமி ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், அபிஷேக ஆராதனை நடந்து பின்
அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. இனிவரும் காலங்களில் இத்தலைமுறையும்,
இனிவரும் தலைமுறையும் இப்புண்ணிய ஸ்தலத்தை வழிபட்டு இவர்கள் அருள் ஆசியை
பெறுவோம்.
விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ! ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே !
முருகன் துதி
மூவிரு முகங்கள் போற்றி ; முகம் பொலி
கருணை போற்றி ! ஏவருந்துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி ! காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி !
அன்னாள் சேவலும் மயிலும் போற்றி !
திருக்கைவேல் போற்றி ! போற்றி !!
சிவன் துதி
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணர்ந்தன அருவித்திரள் மழலை முழுவதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவா வண்ணம் அறுமே
சரஸ்வதி துதி
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் - ஏய
உணர்விக்கும் என் அம்மே ! தூய உரு பளிங்கு - போல்
என் உள்ளத்தின் உள்ளே இருப்பாள்
இங்கு வாராது இடர்
நாராயணன்
நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நா மங்கையால் தொழும் நல் நெஞ்சே - வாமருவி
மண்ணுலகம் உண்டு மகிழ்ந்து வண்டுறையும் - தன்
துழாய்க் கண்ணனையே காண்க நம் கண்
மகாலட்சுமி
காடுவெட்டிப்போட்டு கடிய நிலந்திருத்தி
வீடு கட்டி கொண்டிருக்கும் வேள் வணிகர் - வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்காதிரு.
ஸ்ரீ கண்டம்மாள் காப்பு
அளவில்லா அன்பினை அகிலத்தின் மீது - அள்ளிச்
சொரிந்து; நம் வேடன் நாடார் குலம் தளைதோங்க
அல்லும் பகலும் அனுக்கிரகிப்பாள் நம் ஈஸ்வரி
ஸ்ரீ கண்டம்மாள்; பேரிடர் நீக்கி பெரும் புகடிந தந்தெம்மை
மாறிடா இன்ப மகிழ்ச்சிப் பெருமேடை ஏறிட வைப்பாள்
எங்கள் தாயாம் ஸ்ரீ கண்டம்மாள்
காப்பென வந்தது காலடி பற்றினேன்
முப்பில்லாதாயே ! நிகரில்லா சாமி நத்தம் ஊரிலே
வாழ்கின்ற கண்டம்மாள் தாயே ! உன்னை யாப்பில்
வாழ்த்தும் எங்களுக்கு நல்வாழ்வும் ; நற்புகழும் தந்தருள
போற்றினேன் பேச்சியெனவே ;